திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா..

திருப்பத்தூரில் அண்ணாவின் 112 வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக நகர கழக சார்பில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் வணிக வளாகத்திற்கு அருகில் உள்ள அண்ணா திரு உருவ படத்திற்கு112வது பிறந்தநாளை முன்னிட்டு  திருப்பத்தூர்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  நகர கழக சார்பில் அட்சயா   முருகன் தலைமையில்  மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி அண்ணாவை  புகழ்ந்து கோஷங்களை எழுப்பி  கொண்டாடினர். பிறகு பக்கத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து சின்னம்மா மற்றும்  தினகரனை புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர். இறுதியாக திருப்பத்தூர் அமமுகநகர செயலாளர் அட்சயா  முருகன் பேசுகையில் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்கிற பெயர் வருவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. இன்னும் தமிழகத்திற்கு நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்.  உடன் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பூபதி, மாவட்ட துணை செயலாளர் நசிமா, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அக்ரம்,  நகர துணை செயலாளர்கள்  ரஞ்சித், பிரபு ,  நகர பொருளாளர் சரவணன், மாவட்ட  இளைஞர் பாசறை செயலாளர் சந்திரன், மகளிர் அணி தலைவி பாப்பம்மாள்,  கழக உறுப்பினர்கள் மற்றும்  தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image