கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.. September 26, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் கந்திலி மண்டலநாயன குண்டா கிராமத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை வாகனத்தை அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த வாரம் சென்னை தலைமைச் செயலகத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலநாயன குண்டா ஊராட்சி காசிமலையூர் பகுதியில் இன்று அம்மா நகரும் நியாயவிலை கடை என்ற திட்டத்தின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் வீரமணி கலந்துகொண்டு அம்மா நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்திலி ஒன்றிய அதிமுக செயலாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சாந்தகுணசீலன் உட்பட அரசு துறை அதிகாரிகள் , ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.. திருப்பத்தூர் மாவட்ட செய்திகளுக்காக நான் உங்கள் கோவி.சரவணன்,