திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு. September 20, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூரில் பாஜக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தமிழ் நாடு குடியிருப்பு பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் மாநில, மண்டல, மாவட்ட, நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. மாநில மகளிரணி செயலாளர் கார்த்தியாயினி, வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆய்வு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராகவன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் குருசேவ், கந்திலி ஒன்றிய தலைவர் பரத் விஜய், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பு உட்பட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்..