ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்.. September 24, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த ஆசிரியராக ராஜாவூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு மனிதநேய விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்.. திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் உதவும் உள்ளங்கள் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மனிதநேய விருது வழங்கும் விழா திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இந்திரா என்பவருக்கு சிறந்த மனிதநேயர் என்ற விருதினை வழங்கினார். இதில் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள், உதவும் உள்ளங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..