நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..

நாட்டறம்பள்ளி பகுதியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான நிர்வாகிகள்.. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி சின்னச்சாமி தெரு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி, பாமக, மதிமுக, அதிமுக, திமுக போன்ற கட்சிகளிலிருந்து விலகி தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஒபிசி அணி செயலாளர் ரமேஷ், மாவட்ட மகளிரணி துணை தலைவர் மீனாட்சி, மாவட்ட ராணுவ பிரிவு தலைவர் கனகராஜ், மாவட்ட, ஒன்றிய, மண்டல பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image