திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி.. September 19, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் ரூபாய் 2,65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மெத்தைகள், தலைமனைகள், CTG உபகரணங்கள் இதயம் தொடுவரைபடம் போன்ற உபகரணங்கள் ஒப்படைக்கும் நிகழ்வு அரசு தலைமை மருத்துவர் திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் சிவனருள் அவர்களிடம் ஒப்படைத்தார். இதில் அரசு தலைமை செவிலியர் சரஸ்வதி, அரசு மருத்துவர்கள் பிரபாகர் சிவகுமார் உட்பட அரசு மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..