ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் தொடர் மணல் திருட்டு. கண்டுகொள்ளாத வருவாய் துறை, காவல்துறை என பொதுமக்கள் குற்றச்சாட்டு..

ஜோலார்பேட்டை பொன்னேரி பகுதியில் விவசாய நிலத்தில் தொடர் மணல் திருட்டு. விவசாயிகள் வேதனை.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னோரி ஊராட்சி ராமனூர் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஏலகிரி மலை அடிவாரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நிலக்கடலை, வாழை, நெல், கரும்பு மற்றும் வீட்டு கால்நடைகளான ஆடு, பசுமாடு போன்றவைகளுக்கு தேவையான தீவன பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு சில விவசாய நிலங்களில் அப்பகுதியில் உள்ள மணல் மாபியாக்கள் மற்றும் செங்கல் சூளை வியாபாரிகள் இரவு பகல் என்று பாராமல் தொடர் மணல் மற்றும் செம்மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் கொடுக்கும் தகவல் மீது வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை நேர்மையான முறையில் கையாள்வதில் சிறந்தவர் என்று திருப்பத்தூர் மாவட்ட மக்களால் பேசப்படும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image