பேரூராட்சி அலுவலகம் முன்பு பாஜக கொடி கம்பம். நாட்டறம்பள்ளியில் போலிசார் குவிப்பு...

பேரூராட்சி அலுவலகம் எதிரில் பாஜக கொடி கம்பம் அமைப்பு. காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதம். நாட்டறம்பள்ளியில் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள உழவர் சந்தை முன்பு நாட்டறம்பள்ளி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாஜகவின் கொடி கம்பம் திருப்பத்தூர் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதனை அறிந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் சுமதி மற்றும் நாட்டறம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடி கம்பம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன் உட்பட பாஜகவினர் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பாஜக நிர்வாகிகள் நாங்கள் முறைப்படி நாட்டறம்பள்ளி பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்து உரிய அனுமதி பெற்று தான் கொடி கம்பம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image