நாட்டறம்பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக் வெட்டி 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிய மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ்.. September 17, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் நாட்றம்பள்ளியில் பாரத பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய மாவட்ட தொழில் பிரிவு தலைவர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட அதிபெரமனூர் பகுதியில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்த நாள் விழா திருப்பத்தூர் மாவட்ட தொழில் துறை பிரிவின் தலைவர் குருசேவ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஊர் மாரியம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நலமுடன் வாழ சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து நாட்டறம்பள்ளி பகுதியில் பிரதமரின் 70 வது பிறந்த நாளை குறிப்பீடும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழா இறுதியில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாட்டறம்பள்ளி பாஜக ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி துணை தலைவர் மீனாட்சி, ஒன்றிய இளைஞரணி தலைவர் லோகேஸ்வரன், ஒன்றிய பொதுச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய மகளிர் அணி தலைவர் செல்வி, மாவட்ட ராணுவ பிரிவு தலைவர் கனகராஜ், மாவட்ட ஓபிசி பிரிவு அணி தலைவர் ரமேஷ் உட்பட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..