மூன்று வருடங்களாக குடிநீர் வசதி இல்லாத மலை கிராமம். காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

மூன்று வருடங்களாக குடிநீர் வசதி இல்லாத மக்கள்.. காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்... திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சிம்மணபுதூர் ஊராட்சி காமராஜர் நாடு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஜவ்வாது மலை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கிராமத்தில் கடந்த மூன்று வருடங்களாக குடிநீர் வசதி இல்லாமல் அருகிலுள்ள ஏரியிலும். நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள சிம்மணபுதூர்  பகுதியில் இருந்து நாள்தோறும் குடிநீருக்காக  இருசக்கர வாகனங்கள் மற்றும் தலைமீது சுமந்து  குடிநீர் எடுத்து செல்லும் அவலநிலை தொடர்கதையாக வருவதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காலி குடங்களுடன் சிம்மணபுதூர் - எக்கூர் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத காரணத்தினால் அனைவரும் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.. இதுகுறித்து பகுதி பொதுமக்கள் கூறுகையில்.. சிம்மணபுதூர்  ஊராட்சியில் எங்கள் காமராஜ் நாடு பகுதி அமைந்திருந்தாலும். கடந்த மூன்று வருடங்களாக குடிநீருக்காக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் ஒன்றிய நிர்வாகத்திடமும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருக்கும் பொழுது வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நேரில் முறையிட்டும் இதுவரை எங்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர யாரும் முன்வரவில்லை. தற்பொழுது அருகில் உள்ள ஏரியில் மழைநீர் தேங்கி இருப்பதால் ஏரியில் இருந்துதான் தற்போது குடிநீருக்காக நாங்கள் குடிநீர் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் இருந்த ஆள்துளை கிணறு பழுதடைந்து மூன்று வருடங்களாக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல்  மூன்று வருடங்களாக குடிநீருக்காக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். இப்பகுதியில் பள்ளிமாணவர்கள் முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கும் எங்களுக்கு  அடிப்படை தேவையான குடிநீர் வசதியை ஒன்றிய நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்தி தரவேண்டும். அப்படி இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டமாக  எங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்போதும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால்அரசாங்கம் சார்பில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் காடுகளுக்கு வனவாசம் செல்ல இருக்கிறோம் என கூறினர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழுடன்.. 


செய்திகளுக்காக நான் உங்கள் கோவி.சரவணன். திருப்பத்தூர் மாவட்டம்...


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image