திருப்பத்தூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற நிருபரின் செல் போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார்.. நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல் துறை... July 01, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் காவல் நிலையத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபரின் செல் போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார்... நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல் துறை... திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலையம் மிகவும் புகழ் பெற்ற காவல் நிலையம் ஆகும். இந்த கந்திலி காவல் நிலையத்திற்கு உட்பட எல்லைகள் சுமார் 36 கிராமம் ஊராட்சிகள் வருகிறது. இந்த காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு வகையான புகார்கள் அளிக்க வருகின்றனர். இந்நிலையில் இன்று கந்திலி காவல் நிலையத்திற்கு தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளர் சரவணன் என்பவர் அங்கு சென்றுள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக காவல் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் கூட்டமாக நின்றுகொண்டு இருப்பதை அறிந்த செய்தியாளர் அந்த கூட்டத்தை படம் பிடிக்கும் போதும் திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் தொல்காப்பியன் என்பவர் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்து புகைப்படம் எடுக்க பயன்படுத்திய செல் போனை பறித்து செல் போனில் இருந்த ஆவணங்களை காவல் துறை அதிகாரிகள் கண் முன்னே அழித்துள்ளர். பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் முன்னே நடத்த சம்பவம் குறித்து கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் அவர்களிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால் ஆய்வாளர் புகாரை பெற்றுக்கொண்டு நிருபரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்படுகிறார். கடந்த வாரம் இதோ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குனிச்சி என்ற பகுதியில் இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட்ட போது அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் கண் முன்னே படம் எடுத்த நிருபரை மோதல் கோஷ்டியினர் அடித்து உதைத்தனர். தற்போது கந்திலி காவல் நிலைய எல்லை பகுதிகளில் செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணி செய்து மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்று வரும் டாக்டர் விஜயகுமார் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கந்திலி காவல் நிலைய வளாகத்தில் காவலர்கள் கண்முன்னே நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்து செல்போனை பறித்த சம்பவம் பத்திரிகையாளர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது... செல்போனை பறித்து நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டமாக காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுமென தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது... இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...