சசிகலா மற்றும் அவர்கள் குடும்பம் எங்களுக்கு எதிரி எதிரிதான் அமைச்சர் வீரமணி தடாலடி பேட்டி. July 16, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் சசிகலா மற்றும் அவர்கள் குடும்பம் எங்களுக்கு எதிரி எதிரிதான் அமைச்சர் வீரமணி தடாலடி பேட்டி. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராஹரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டில் இரண்டாவதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ சிறப்பு மையம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா, ஆண்டியப்பனூர் சித்த மருத்துவமனை மருத்துவர் விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். அதன்பின் சித்த மருத்துவ மைய வளாகத்தில் மரம் நடும் பணி மற்றும் மூலிகை செடிகளை பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் வீரமணி.. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தற்பொழுது covid-19 எனப்படும் கொரோனாவுக்கு நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சித்த மருத்துவ சிகிச்சையில் பல்வேறு நபர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். அதனை அடுத்து தமிழகத்தில் இரண்டாவது இடமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ மையத்தை தொடங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணை பிறப்பித்தார் அதனை தொடர்ந்து தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது பாரம்பரிய முறையான சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அளவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு காரணம் மாவட்ட ஆட்சியரும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் குறிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு நல்கிய காரணத்தினால்தான் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அரசியலில் எங்களுக்கு எப்போதும் எதிரி சசிகலா மற்றும் அவர்கள் குடும்பம் தான். சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்டதற்கு அவர்(சசிகலா) வெளியில் வருவதாக எங்களுக்கு தெரியவில்லை இருப்பினும் அவர்கள் எங்களுக்கு எப்போதும் எதிரி எதிரிதான் என தடாலடியாக அமைச்சர் கே.சி வீரமணி பேட்டி அளித்தார். இந்த விழாவில் அரசுத்துறை அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்..இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. உங்கள் தமிழ் சுடரில் காலை நாளிதழுடன்... செய்திகளுக்காக நான் உங்கள் கோவி.சரவணன்...