திருப்பத்தூர் அருகே காலையில் பள்ளி பொதுத் தேர்வில் பாஸ்.. மாலையில் இடிதாக்கி உயிரிழந்த பள்ளி மாணவன்.. சோகத்தில் உறவினர்கள்..

திருப்பத்தூர் அருகே காலையில் பள்ளி பொதுத் தேர்வில் பாஸ்.. மாலையில் இடிதாக்கி உயிரிழந்த பள்ளி மாணவன்.. சோகத்தில் உறவினர்கள்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை அடுத்த குணசேகரன் மகன் அண்ணாமலை வயது 17 இவர் மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அருகில் தங்களது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தபோது  திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 5 மணி அளவில் மழை பெய்து வந்த நிலையில். அண்ணாமலை தங்களது நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அண்ணாமலையின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாமலை இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. மாடு பிடிக்க சென்ற சிறுவன் இடிதாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழுடன்..


செய்திகளுக்காக நான் உங்கள் கோவி.சரவணன்... திருப்பத்தூர் மாவட்டம்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image