திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் அறுந்து விழும் நிலையில் மின்சார கம்பி. உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மின்சார கம்பி கீழே தொங்கும் அபாயம். பொதுமக்கள் அச்சம்... திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஊராட்சிஒன்றிய எல்லைக்குட்பட்ட சிம்மணபுதூர் ஊராட்சி மேற்கத்தியன் கொட்டாய் கிராமப்பகுதியில் உள்ள ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின் இணைப்பு செல்கிறது. இந்த மின் இணைப்பு கடந்த ஆறு மாதங்களாக பொதுமக்களுக்கு இடையூறாகவும் எந்த நேரத்தில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் கீழே தொங்கி அறுந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக இந்த மின் கம்பி விவசாய நிலத்தின் மேல் செல்வதால் அங்கு விவசாயம் பணியை மேற்கொள்ளும் விவசாயிகள் பெருமளவில் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து பேராம்பட்டு இளநிலை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு பலமுறை தகவல் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.. அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா???


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழ்.. 


செய்திகள்- கோவி.சரவணன்- 9597446260..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image