தனது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை. விபரீத முடிவு எடுத்த இளைஞரின் உயிர் ஊசல். ஆம்பூரில் பரபரப்பு..

ஆம்பூரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் விரக்தியடைந்த வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு. கவலைக்கிடமான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒ. ஏ.ஆர் தியேட்டர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பை மீறி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்பவர் அங்குள்ள மருந்துகடைக்கு வந்ததாக கூறப்படுகிறது அப்போது இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .இதனால் போலீசாரிடம் வாகனத்தை கொடுக்கவில்லையென்றால் தீக்குளிப்பேன் என்று வாலிபர் கூறியுள்ளார். இருப்பினும் போலீசார் வாகனத்தை கொடுக்காததால் போலீசாரின் கண்முன்னே இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனை அறிந்த போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை அணைத்து கவலைக்கிடமான நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பின்னர் 90 சதவீத தீ காயங்களுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது வேலூர் சரக டி. ஐ.ஜி காமினி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் சம்பவ இடத்தில் மற்றும் மருத்துவமனையில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முகிலனின் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து தகவலறிந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வாலிபத்தை வைத்துக் கொண்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் முகிலனின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார் ஆம்பூர் பகுதியில் போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள். உங்கள் தமிழ்ச்சுடர் காலை நாளிதழுடன்..


செய்திகளுக்காக நான் உங்கள்.கோவி.சரவணன்.. திருப்பத்தூர் மாவட்டம்...



Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image