திருவொற்றியூரில் புதிய கொரொனா சோதனை மையத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார்... July 01, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருவொற்றியூரில் புதிய கொரொனா சோதனை மையத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார் அவருடன் சிறப்பு அதிகாரி ஜான் டாம் வர்கீஸ் அதிமுக மாவட்டச் செயலாளர் வி. அலெக்சாண்டர் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர் கொரேனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டவர்கள் இந்த மையத்திற்கு வந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா அல்லது தனிமை வார்டுக்கு செல்ல வேண்டுமா என டாக்டர் குழு முடிவு செய்யும் மையத்தை திறந்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர் பி. உதயகுமார் கூறியதாவது இன்று உலக மருத்துவர் தினம் இந்த மருத்துவர் தினத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் சேவையை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் மருத்துவர்களின் சேவை என்பது கடவுளுக்கு நிகரானது என நாம் கூறுவோம் நோயாளிகளைக் காப்பாற்ற மருத்துவத் துறையினர் உள்ளாட்சித் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் எங்களைப்போல பொதுநல பணியில் ஈடுபட்டு வருபவர்கள் அமைச்சர்கள் அதிகாரிகள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள் தமிழக முதல்வர் தினசரி தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகப் பணிகளையும் கவனித்துக் கொண்டு களத்தில் உயிரை பணயம் வைத்துக் கொண்டு இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார் தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக பாதுகாவலராக தமிழக முதல்வர் உள்ளார் ஆனால் வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக களத்தில் இல்லாத ஒருவர் முதல்வரை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிக்கை விடுகிறார் அவரது அறிக்கை குழப்பங்களை ஏற்படுத்தும் முன்கள பணியாளர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதை மக்கள் யாரும் விரும்பவில்லை இந்த சவாலான பணியில் அனைவரும் உயிரை பணயம் வைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறோம் ராணுவவீரர்கள் தாய்நாட்டை காப்பதுபோல் இங்கு உயிரை பணயம் வைத்து அனைவரும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அம்மாவின் அரசு அவரது பாணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது யார் தவறு செய்தாலும் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று கூறிய புரட்சித்தலைவர் பாணியில் அம்மாவின் அரசை முதல்வர் ஆட்சி செய்து வருகிறார் நீதித்துறை என்ன சொல்கிறதோ அதை முறையாக செயல்படுத்துகிறோம் ஆனால் களத்தில் இல்லாதவர்கள் கபடி பாடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சமயத்தில் நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள் பணி நிச்சயமாக தேசத்தின் வரலாற்றில் இடம் பெறும் சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் நம்மிடம் இல்லை இந்த சம்பவத்தை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது நீதியரசர்கள் என்ன கூறினார்களோ அதன்படி சட்டத்தின்படி தமிழக முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகிறார் எங்கள் மீது அநீதியாக பழி சுமத்துகிறார்கள் இது நியாயம்தானா அவர்களுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதே போல் எங்களுக்கும் இருக்கும்தானே ஆனால் நாங்கள் களப்பணியில் இருக்கிறோம் எங்கள் மீது சேற்றை வாரி பூசுகிறார் எனக் கூறினார் படவிளக்கம் .திருவொற்றியூரில் கொரோனோ வைரஸ் நோயாளிகளை கண்டறியும் பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார் அவருடன் சிறப்பு அதிகாரி ஜான்டாம் வர்கீஸ் அதிமுக மாவட்ட செயலாளர் வி அலெக்சாண்டர் எம்எல்ஏ உட்பட பலர் உள்ளனர்இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்...