திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி.. July 04, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் *திருப்பத்தூரில் காவல் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினர்.* திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.....இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...