ஆம்பூர் திமுக எம்எல்ஏவின் செருப்பு விலை 6500 ரூபாய்.. திமுக ஊராட்சி செயலாளர் கைகளில் தூக்கிச் சென்ற சம்பவம்.. மேலும் சர்ச்சையில் வில்வநாதன்...

ஆம்பூர் திமுக எம்எல்ஏவின் செருப்பு விலை 6500 ரூபாய்.. திமுக ஊராட்சி செயலாளர் கைகளில் தூக்கிச் சென்ற சம்பவம்.. மேலும் சர்ச்சையில் வில்வநாதன்... திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பொன்னப்பள்ளி கிராமம். ஒரு தடுப்பணையை பார்வையிட சென்ற திமுக எம்எல்ஏ வில்வநாதனின் ஒரு நடவடிக்கை இப்போது பலத்த சர்ச்சையை உண்டு பண்ணியிருக்கிறது. அந்த தொகுதி எம்எல்ஏ அவர். தடுப்பணைக்கு சென்ற போது வழி எங்கும் சேறு, சகதி. ஆகையால் செருப்பை ஓரமாக கழற்றிவிட்டு வெறுங்காலில் சென்றுள்ளார். அவரது செருப்பை திமுக ஊராட்சி செயலாளர் சங்கர் கைகளில் தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது. விஷயம் பெரிதாக, தானாக தான் செருப்பை கையில் எடுத்துச் சென்றேன், எம்எல்ஏவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார் சேகர். எம்எல்ஏ விஸ்வநாதனும் இதே பதிலை வேறு வடிவத்தில் கூறி சப்பைகட்டு கட்டினார். நான் சாதி பார்த்து பழகும் நபர் கிடையாது என்று எம்எல்ஏ சொன்னாலும், யாரும் அதை நம்ப தயாரில்லை என்கின்றனர் தலித் அமைப்புகள். இது குறித்து அந்த அமைப்பினர் கூறும் கருத்துகளும் கொஞ்சம் யோசிக்க தான் வைக்கின்றன. சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி திமுக என்று அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். சரிக்கு சமம் என்று கூறி ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுக்கலாம், அறிக்கையும் தரலாம். இந்த இருவரும் திமுகவினர். ஆகவே அவர்களின் பதில்கள் அப்படித்தான் இருக்கும். அன்றைக்கு நடந்ததை இந்த உலகமே பார்த்தது. எம்எல்ஏ விஸ்வநாதனின் செருப்பு விலை 6500. இது பலருக்கு தெரியாது. அதனால்தான் அவர் செருப்புடன் சேற்றில் நடக்க தயங்கினார். ஆகவே அதை பட்டியலின நிர்வாகியிடம் கொடுத்து எடுத்து சொல்லியிருக்கிறார். நாங்கள் சொல்வது பொய் இல்லை. சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்களிடம் தீர விசாரித்த போதுதான் இந்த விவரம் தெரிய வந்திருக்கிறது. சமூக நீதியை பற்றி விவரமாக பேசும் திமுக தொடர்ந்து இதுபோன்று பட்டியலின மக்களை அவமதித்தும், கீழ் தரமாகவும் நடத்தி வருகிறது. இந்த சம்பவம் எதேச்சையாக நடந்தது என்று வைத்துக் கொண்டாலும், அதை நியாயப்படுத்துவது தான் திமுக. அவர்களின் வாதம் இந்த சம்பவத்துக்கு தொடர்பில்லாமல் இருக்கிறது. அனைத்தும் பண்பட்ட நடிப்பு. தலித் அமைப்புகளை இப்படி சொல்லி ஏமாற்றிவிட நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் திமுகவின் இந்த போக்கை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்று கொந்தளிக்கின்றனர் தலித் அமைப்பினர். அண்மைக்காலமாக திமுகவின் இந்த சாதிய மனப்போக்கு ஏதோ, இப்போது வந்து ஒட்டிக்கொண்டது அல்ல. தொடர்ந்து பல தருணங்களில் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். திமுகவின் இந்த போக்கை கண்டித்து, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை, காரை, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தியது.ஆனால் எம்எல்ஏவை நான் சாதி பாகுபாடு பார்ப்பதில்லை என்று கூறி தனது ஊரில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் தரிசனம் செய்ய விடுவதில்லை என்ற புதிய சர்ச்சையும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. . ஆக இந்த விவகாரம் இப்போதைக்கு முடியாது என்பது தான் உண்மை….. இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் உங்கள் தமிழ் சுடருடன்.. செய்திகளுக்காக கோவி. சரவணன்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image