திருப்பத்தூர் அருகே நெல்சன் மண்டேலா பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை மீட்பு அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா.. July 18, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் அருகே நெல்சன் மண்டேலா பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை மீட்பு அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பெரிய மோட்டூர் பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிக்கரை ஓரங்களில் இயற்கை மீட்பு அறக்கட்டளை சார்பில் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாள் விழா மரம் நடும் நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமால் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக இயற்கை மீட்பு அறக்கட்டளை தலைவர் நாராயணன் மற்றும் மக்கள் பாதை நிர்வாகி இராதாகிருஷ்ணன் மற்றும் Happy Foundation நிர்வாக இயக்குனர் வேலு , இயற்கை மீட்பு அறக்கட்டளை செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்டு 70 மரக்கன்றுகளை நட்டு புதிய பசுமை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரிய மோட்டூர் ஊராட்சி செயலாளர் சாமு, இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்... இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழுடன்... செய்திகளுக்காக நான் உங்கள் கோவி.சரவணன்.. திருப்பத்தூர் மாவட்டம்...