திருப்பத்தூர் அருகே தாய் தூக்கிட்டு தற்கொலை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2வயது ஆண் குழந்தை.. போலிசார் விசாரணை.. July 08, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் அருகே தாய் தூக்கிட்டு தற்கொலை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2வயது ஆண் குழந்தை.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கோயிலூர் பகுதியைச் சார்ந்தவர் சிலம்பரசன் (32) ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (27) ஆகிய இருவருக்கும் சில தினங்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சிலம்பரசனை கவிதா வேலைக்குச் செல்லுமாரு அனுப்பி விட்டு இரவு கவிதாவும் தனது 2 வயது கைக்குழந்தையான ரிஷித் தையும் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்நிலையில் கவிதாவின் அலரும் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவரது மாமியார் நீலா ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தபோது கவிதா தூக்கு மாட்டி இருப்பதை அறிந்து நீலா அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்தார். கவிதாவின் அருகே அவரது மகன் ரிஷித் தூக்கில் தொங்கி இருக்கும் நிலை ஊர் பொதுமக்கள் உடனடியாக ரிஷிதை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் குழந்தை நல்ல முறையில் இருப்பது தெரியவந்தது.. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்திலி அருகே தாயும் தற்கொலை செய்துகொண்டு 2 வயது கைக்குழந்தைக்கு தூக்கிலிட்ட சம்பவம் திருப்பத்தூர் சுற்றுவட்டார அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...