ஆம்பூர் அருகே கொரோனாவை வென்ற மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை உதவி நாடும் 103 வயது மூதாட்டி...... July 14, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் சட்டமன்ற உறுப்பினரின் நீளும் உதவிக்கரம்: கொரோனாவை வென்று விட்டேன் வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை உதவி நாடும் 103 வயது மூதாட்டி... ஆம்பூர் அருகே கொரோனா வைரஸ் வென்ற 103 வயது பாட்டி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வரும் மூதாட்டி குடும்பம் செய்திகள் வெளியானதை தொடர்ந்து ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மூதாட்டிக்கு பண உதவி மற்றும் காய்கறி மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் வசித்து வருபவர் 103 வயது மூதாட்டி ஹமிதா பீ இவர் தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார் மூதாட்டிக்கு கடந்த ஒன்றாம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தொடர் சிகிச்சையால் குணமடைந்து மூதாட்டி நேற்று வீடு திரும்பினார் தள்ளாத வயதிலும் ஆரோக்கியத்துடன் அவர் வீடு திரும்பியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர் மூதாட்டி 12 குழந்தைகள் இதில் 11 குழந்தைகள் இறந்து விட்ட நிலையில் 58 வயதான கணவரை இழந்து மகளின் வாடகை வீட்டில் வசிக்கிறார் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று ஏற்பட்டதால் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட தற்போது வீடு திரும்பியுள்ளனர் மேலும் இவர்களுடன் வசிக்கும் 30 வயது பேத்தியும் கணவரை இழந்து இவர் ஆம்பூர் அருகே தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார் மூதாட்டி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் இவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மூதாட்டி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் தனியார் காலனி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவுடன் இவர்களை வரவேண்டாம் என கூறி அனுப்பி விட்டதாக தெரிவிக்கின்றனர் இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்குமென குடும்பத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் கட்சியினர் பெரியவரிகம் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் அப்பகுதி மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார் மூதாட்டிக்கு பண உதவி செய்தார். தற்போது இந்த எம்எல்ஏ மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன வண்ணம் இருந்தாலும் தனது மக்கள் பணியை செய்த எம்எல்ஏ வில்வநானுக்கு தமிழ் சுடர் காலை நாளிதழ் சார்பாக நல்வாழ்த்துக்கள்... இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. தமிழ் சுடர் காலை நாளிதழ்... செய்திகளுக்காக நான் உங்கள் கோவி. சரவணன்... திருப்பத்தூர் மாவட்டம்...