பச்சூர் வணிகர் சங்கம் சார்பில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொரோனா நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்...

பச்சூர் வணிகர் சங்கம் சார்பில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொரோனா நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்... திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பச்சூர் கிராமத்திலுள்ள வணிகர்களின் தீவிர முயற்சியால் தற்பொழுது கொடிய வைரசான கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உதவும் வகையில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40அரிசி மூட்டைகள், சர்க்கரை, ரவை, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழா பச்சூர் வணிகர் சங்க தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட வணிகர் சனங்களின் பேரவைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், பொருளாளர் செந்தில் முருகன், நாட்றம்பள்ளி தாசில்தார் சுமதி, பச்சூர் வணிகர் சங்கத்தின் துணைத்தலைவர் சிவமணி, செயலாளர் நாகண்ணன், துணை செயலாளர் கே.சி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை காவலர்களுக்கு மற்றும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சிறப்பு மையத்திற்கு 40 மூட்டை அரிசி மற்றும் பருப்பு, ரவை, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி விழா சிறப்புரை ஆற்றினர். இதில் பச்சூர் வணிகர் சங்க பொருளாளர் வெங்கடேசன் மற்றும் துணைப் பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் நாட்றம்பள்ளி, புதுப்பேட்டை, கந்திலி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளின் வணிகர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்..


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழுடன்..


செய்திகளுக்காக நான் உங்கள் கோவி.சரவணன். திருப்பத்தூர் மாவட்டம்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image