திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பரத் என்பவர் நியமனம்... June 08, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பரத் என்பவரை நியமனம்... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எல்லைக்குட்பட்ட திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை போன்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி ஒப்புதலோடு வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரபு அவர்கள் புதிய சட்ட மன்ற பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார். அந்த வகையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த பரத் என்பவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்...இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்..