வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... குமரி தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினம் இன்று... June 01, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....இன்று குமரி தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினம் இன்று... கேரளா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவதற்கு பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி அவற்றில் வெற்றி கண்டவர் மார்ஷல் நேசமணி இந்த சாதனைகளின் காரணமாக நேசமணி "குமரித் தந்தை" என அழைக்கப்பட்டார். திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார் *மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன் மார்ஷல் நேசமணி மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்று செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் தமிழ் சுடர் காலை நாளிதழுடன் இணைந்திருங்கள்...