மதுரை அலங்காநல்லூர் சுற்றுவட்டாரத்தில் பூத்து குழுங்கும் நாவல் பூக்கள். நாவல் பழ சீசன் துவங்கவுள்ளதால், உரிய விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை...

மதுரை அலங்காநல்லூர் சுற்றுவட்டாரத்தில் பூத்து குழுங்கும் நாவல் பூக்கள். நாவல் பழ சீசன் துவங்கவுள்ளதால், உரிய விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை. ம


 


மாவட்டம்அலங்காநல்லூர் சுற்றுவட்டாரத்தில் சரந்தாங்கி, வலையபட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட 50 க்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான நாவல் மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர். தற்போது இந்த வருடத்திற்கான சீசன் துவங்கவுள்ளதால் நாவல் மரங்கள் தோறும் அதிகளவில் பூக்கள் பூத்துகுழுங்க தொடங்கியுள்ளன. மேலும் இந்த மரங்கள் வறட்சியை தாங்கி பலன்தர கூடியவையாகும். சி வைட்டமின் சத்துள்ள நாவல் பழம், மற்றும் அதன் விதைகளில் மருத்துவகுணங்கள் பல உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கால் மா, கொய்யா உள்ளிட்ட பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல், நஷ்டத்தை சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். . இதனால் ஜூன் மாத கடைசியில் அறுவடை துவங்கவுள்ள நிலையில் நாவல் பழத்திற்கு உரிய விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


தமிழ் சுடர் காலை நாளிதழ்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image