திருப்பத்தூர் அருகே நீச்சல் பழகச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை... June 02, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் அருகே கிணற்றில் நீச்சல் அடிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி. 2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் உடல் மீட்பு. திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. இவருடைய மகன் விஜயராஜ் (19) அஃதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் இவருடைய நண்பர்களான கார்த்தி, முகேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து ஆதியூர் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மாலை 3 மணியளவில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது விஜயராஜ்க்கு சரிவர நீச்சல் தெரியாத சூழ்நிலையில் மூவரும் கிணற்றுக்குள் நீச்சல் அடித்து உள்ளனர். அப்போது முகேஷ், கார்த்தி இருவரும் மேலே நீச்சலடித்து கரையேறி உள்ளனர். இந்நிலையில் விஜயராஜ் மேலே வராததால் பதட்டமடைந்த நண்பர்கள் அருகில் உள்ள பொதுமக்களுக்கு தகவல் அவர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டும் விஜயராஜயை மீட்க முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் தீவிர தேடுதலுக்குப் பிறகு விஜயராஜீன் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நண்பர்கள் 3 பேர் நீச்சல் பழக சென்ற இடத்தில் சக நண்பர் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்...