இளைஞர்கள் அதிகமாக இருக்கும் கட்சி அதிமுக தான்‌ என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி...

இளைஞர்கள் அதிகமாக உள்ள இயக்கம் அதிமுக அமைச்சர்செல்லூர் ராஜூ போட்டி... மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை விளாங்குடி,மேலமாசி வீதி ஐயப்பன் கோவில், பழைய குயவர்பாளையம் ரோடு, பங்கஜம் காலனி அனுப்பானடி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது தமிழக அரசு இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரேஷன் கடைகளில் 2 கோடியே ஒரு லட்சம் குடும்ப தாரர்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணைகளை, மூன்று மாத காலங்களுக்கு வழங்கியது வருகிறது என்றும் மேலும் மக்கள் சிரமப்படக் கூடாது என்ற காரணத்தினால் அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் ஏற்பாட்டில் மாநகருக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருளாக அரிசி, பருப்பு ,காய்கறிகளை வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்தார். இதைப்பார்த்த திமுக ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்யவேண்டும் என்ற காரணத்தினால் ஒன்றிணைவோம் வா என்று ஏற்படுத்திக்கொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி சிறிது அளவு உதவிகளை செய்துகொண்டு மக்களிடம் புகார்களை பெற்றது போல் மனுவை ரெடி பண்ணி அதை முதல்வரிடம் கொடுத்துள்ளனர் அந்த புகார் மனுவில் எந்த ஒரு குடும்பத்தாருக்கும் தமிழக அரசு வழங்கிய ரூ 1000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என்ற புகார் இல்லை மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் புகார் மனு கொடுக்கின்றனர் அதில் மக்களுக்கு தேவைகளை நிறைவேற்றுவீர்கள் என்று கூறுகின்றனர் ஆனால் மக்களின் தேவைகளை அறிந்து அதிமுக துரிதமாக செயல்பட்டு நிவாரணப் பொருள்களை நாடக கலைஞர்கள்,சலவைத் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்குகிறோம் என்றும் இனியும் யாருக்கேனும் தேவைப்பட்டால் அவர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க தயார் நிலையில் உள்ளோம் என்றும் தெரிவித்தார். எனவே "திமுக செய்வது கேலிக்கூத்தாக" உள்ளது என்றும் குற்றம்சாட்டினார் மேலும் அதிமுக 1 கோடி தொண்டர்கள் உள்ள மாபெரும் இயக்கம் என்றும் இந்த இயக்கத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக உள்ளனர் என்றும் மேலும் அதிகமான பெண்கள் உள்ள இயக்கம் அதிமுக வேண்டும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சிகளில் எம் .எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, பைக்காரா கருப்புசாமி, சோலை ராஜா, சித்தன், கண்ணகி பாஸ்கரன், தளபதி மாரியப்பன், ஜோசப் தனுஷ் லால் கறிக்கடை கிருஷ்ணன், மலைச்சாமி ,எம்ஜிஆர் நாகராஜன், அனுப்பானடி பாலகுமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடர் காலை நாளிதழ்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image