வாணியம்பாடியில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலர் மீது எஸ்பியிடம் பெண் புகார்.. June 08, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் வாணியம்பாடியில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலர் மீது எஸ்பியிடம் பெண் புகார்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் அசோகன் டாக்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் அண்ணாமலை(29) இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அஃதே பகுதியைச் சேர்ந்த குபேரன் மகள் மேகலா (28) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேகலாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்ணாமலை வீட்டில் பெண் பார்க்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது இதை அறிந்த மேகலா தனது குடும்பத்துடன் சென்று அண்ணாமலை மற்றும் அவரது தாயாரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு உள்ளனர். ஆனால் அண்ணாமலை குடும்பத்தினரோ திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்து விட்டு நாங்கள் வசதி வாய்ப்பு உள்ள பெண்ணை தான் எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைப்போம் என கூறியுள்ளனர். இதனையடுத்து மேகலா தன்னை ஆசை வார்த்தை கூறி காதலித்த அண்ணாமலை தன்னை ஏமாற்றி விட்டதாக தினமும் நினைத்து நினைத்து தற்கொலை முயற்சிக்கு முயன்றுள்ளார். அதன் பிறகு மேகலாவின் குடும்பத்தினர் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இடம் இதுகுறித்து புகார் மனு அளித்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனது தெருவை சேர்ந்த பெண்ணை சீரழித்த சம்பவம் தற்பொழுது வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...