திருப்பத்தூரில் கொரோனா நோய் பரிசோதனை மையத்தை தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..


தற்போது தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைகள் 37 பரிசோதனை மையங்கள் மற்றும் 16 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த கொடிய வைரஸக்கு இதுநாள் வரை 49 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்த கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனைக்காக அருகிலுள்ள மாவட்டங்களான தர்மபுரி மற்றும் வேலூருக்கு அனுப்பிவைக்கும் நிலை இருந்து வந்தது. இதனை அடுத்து தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணியின் தீவிர முயற்சியின் காரணமாக இந்தியா அளவில் தாலுக்கா அளவில் முதல் முறையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் மற்றும் அனைத்துவித நுண் கிருமிகளை கண்டறியும் இரண்டு பரிசோதனை கருவியான பிசிஆர் பரிசோதனை மையம் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள மையத்தை தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் , மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி மையத்தை துவக்கி வைத்தனர் . இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, வில்வநாதன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின், துணை இயக்குநர் சுரேஷ், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன், முன்னாள் இணை இயக்குனர் கலிவரதன், இறைநிலை நிர்வாக அலுவலர் சரவணன், அலுவலக கண்காணிப்பாளர் அருள், அரசு மருத்துவர்கள் குமரவேல், வேல்முருகன், பிரபாகர், சிவகுமார், செந்தில்குமாரன், செவிலியர் கண்காணிப்பாளர் சரஸ்வதி மற்றும் தலைமை மருந்தாளுநர் லட்சுமிபதி உதவியாளர் சுந்தரமூர்த்தி, உட்பட செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image