சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக்கொலை-சகோதரன் கைது இரட்டைக்கொலையால் வேலூர் அருகே பரபரப்பு...

*சொத்து தகராறில் தாய் மற்றும் சகோதரி அடித்துக்கொலை-சகோதரன் கைது இரட்டைக்கொலையால் பரபரப்பு* வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி (70) இவருக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர் இதில் பெரியவன் முனிராஜ்(50 ) சின்னம்மா (40 ) மற்றும் சூரியகலா (38)உள்ள நிலையில் சின்னம்மாளுக்கு சற்று உடல்நல குறைபாடு உள்ளதால் திருமணமாகாத நிலையில் தனது தாயுடன் வசித்து வந்தார் முனிராஜ் அதே பகுதியில் தனியாக தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார் இன்னொரு மகளான சூர்யகலா அதே பகுதியில் திருமணம் செய்து வைத்து தனியாக வாழ்ந்து வருகிறார் இதனிடையே முனிராஜ் தனது தாய் இந்திராணியிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று இரவு மீண்டும் தனது தாயான இந்திராணியிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க சொல்லி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது இதில் தாய் இந்திராணி சொத்தை மகள்களுக்கும் சேர்த்து பிரித்து தருவதாக கூறியதாக கூறப்படுகிறது இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் இதில் ஆத்திரமடைந்த முனிராஜ் தனது தாய் இந்திராணியை கல்லால் பலமாக தாக்கியுள்ளார் அதை தடுக்கச் சென்ற தங்கை சின்னம்மாவையும் தாக்கியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாய் இந்திராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்திராணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் இது குறித்து பரதராமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் சின்னம்மாவின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலை செய்த முனிராஜ் கைது செய்து மேலும் முனிராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சொத்துக்காக தாய் மற்றும் சகோதரி கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image