அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..

அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு சிவகாசி தொகுதி கிருஷ்ணபேரி கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராம மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேடடரிந்து மனு வாங்கினார். முதியோர் உதவித்தொகை. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அரசை தேடி பொதுமக்கள் சென்ற நிலை மாறி மக்களை நோக்கி அரசு உதவிகள் என்பதன் அடிப்படையில் அதிமுக அரசு தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் இந்த கிராமத்திற்கு நான் உங்களை தேடி வந்துள்ளேன். அனைத்து மனுக்களையும் விரைந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகாசியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீரை நாங்கள் கொடுத்துள்ளோம். இனி சிவகாசி தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறை என்பதே ஏற்படாதவாறு தாமிரபரணி தண்ணீர் கொடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். சிவகாசி சட்டமன்ற தொகுதியின் முதல் பூத் என்ற வகையில் கிருஸ்ணபேரி மக்கள் அதிமுகவிற்கு என்றும் ஆதரவாக இருந்துள்ளீர்கள். உங்களுககாக நாங்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருப்போம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை கூறலாம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற தலைவர் வினோதினிஅபிமன்னன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, மாவட்ட கவுன்சிலர் வேல்ராணிஉமாலட்சுமி திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் lவேல்ராணிஉமாலட்சுமி, ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், கிருஷ்ணபேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜ், கிளை செயலாளர்கள் நிறைமதி ஆறுமுகம், இந்திராநகர் அய்யனார், கிருஷ்ணபேரி அய்யனார். இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் உட்பட பலா் கலந்து கொண்டனர். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் தமிழ் சுடர் காலை நாளிதழுடன் இணைந்திருங்கள்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image