வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விழிப்புணர்வு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா மற்றும் காங்கிரஸ் கட்சியினர்... June 29, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் 85 ரூபாய் பெட்ரோல் விலையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 85 பேருக்கு பண உதவி செய்த காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை தலைவர் வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விழிப்புணர்வு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் விலை உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த ஜனாதிபதி அவர்களுக்கு மனு ஒன்றை வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் இடம் கொடுக்க வந்தபோது வட்டாட்சியர் மனுவை பெற்று கொள்ளாமல் மனுவை பெட்டியில் செலுத்தி விட்டு செல்லும்படி தெரிவித்ததையடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய மனுவை புகார் பெட்டியில் செலுத்தி விட்டு பின்னர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப வந்த பொதுமக்களிடையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த 60 ரூபாய் பெட்ரோல் விலையை பொதுமக்கள் நினைவுகூறும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்போது உள்ள 85 ரூபாய் பெட்ரோல் விலையை அவர்களிடம் எடுத்துக் கூறி அவர்களுக்கு 25 ரூபாய் வழங்கினார் அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் முன்பு இருந்த டீசல் விலை 45 ரூபாயை எடுத்துக்கூறி இப்போது உள்ள 79 ரூபாயில் அவர்களுக்கு 35 ரூபாய் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்..இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...