வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....பிரபல ஓவியர் கோபுலு..பிறந்த தினம்இன்று

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....பிரபல ஓவியர் கோபுலு..பிறந்த தினம்இன்று கோபுலு என்கிற கோபாலன் தஞ்சாவூரில் பிறந்தவர். இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால், குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். ஓவியர் மாலியின் ஓவியங்களால் கவரப்பட்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். 1941 இல் மாலியை சந்தித்து, அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். திருவையாறு தியாகராயரின் வீட்டில், அவர் பூசை செய்த இராமர் பட்டாபிசேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச்சொன்னார் மாலி. 1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம்பெற்றது. கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக்கதைகளுக்கும் அவரது மற்ற நாவல்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் கதைக்கு ஓவியங்கள் வரைந்து உயிரூட்டினார். சாவியின் வாஷிங்டனில் திருமணம் தொடருக்கு உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றார். சுமார் இருபதாயிரத்திற்கும் மேலான நகைச்சுவைத் துணுக்குகளையும் வரைந்துள்ளார். 1963இல் பத்திரிகைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். குங்குமம் இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார். பின்னர், விளம்பரத் துறையில் இருந்து விலகி, சார்பற்ற ஓவியராக கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், குங்குமம் ஆங்கியவற்றுக்கு ஓவியங்கள் வரைந்தார். கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு, நவம்பர் 26, 1991) • முரசொலி விருது • எம். ஏ. சிதம்பரம் செட்டியார் விருது *வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியன இவர் பெற்ற விருதுகள் ஆகும்* இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image