இல்லை என்பதே இல்லை அனைவருக்கும் நிவாரண பொருட்கள் கிடைக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ..

இல்லை என்பதே இல்லை அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள்..அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்..


__ மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மத்திய இரண்டாம் பகுதி 55 வது வார்டில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்


அப்போது அவர் கூறியதாவது..


உலகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைப்படி மதுரை மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்குகிறோம் இதுவரை 2 லட்சம் பேருக்கு வழங்கி இருக்கின்றோம் என்றும் இன்னும் வழங்குவோம் என்றும் இல்லை என்பதே இல்லை கேட்பவர்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் உண்டு என்றும் தெரிவித்தார். மேலும் நாங்கள் நாடக கலைஞர்கள், மேடைப் பாடகர்கள், சலூன் கடை பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கி இருக்கின்றோம் என்றும் இன்னும் யாரையேனும் தங்களுக்கு வேண்டுமென்று எங்களிடம் கேட்டால் அவர்களுக்கும் வழங்குவோம் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு செய்தியாளர்கள் திமுகவுக்கு எதிராக அதிமுக போராடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வந்துள்ளதே? என்று கேட்டதற்கு இது முற்றிலும் தவறானது என்றும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்றும் அதிமுகவின் வளர்ச்சியை பொறுக்காத திமுக அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைப்பதே தாங்கமுடியாத திமுக வேண்டுமென்றே பொறாமை கொண்டு இதுமாதிரியான பொய்யான செய்திகளை சமூக இணையதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ராஜா, பைக்கரா கருப்புச்சாமி, முத்துவேல், தளபதி மாரியப்பன், கூட்டுறவு சங்கத்தலைவர் பார்த்தசாரதி, நாகேந்திரன், கண்ணகி, சக்தி விநாயக பாண்டியன், சுவிட் சுப்பையா, மதுரை வீரன், கந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழ்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image