சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்.கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு...

சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்.கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு.


மதுரை ஜுன் -1 மதுரை பெத்தானியா புரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு ரேஷன் கடையில் சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை மூலம் ஆய்வு செய்து கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு காலை 9 மணி அளவில் துவரிமான் கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணியினை துவக்கிவைத்து பின்னர் தொடர்ச்சியாக மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதன்படி பெத்தானியபுரத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி கொண்டு இருக்கும் போது பிச்சை என்பவரின் மனைவி கார்த்திகை செல்வி ரேஷன் கடையில் அரிசி எடை குறைவாக வழங்குவதாக அமைச்சரிடம் நேரில் புகார் சொன்னார் இதைக்கேட்டு அமைச்சர் அந்தப் பெண்ணையும் கடைக்கு அழைத்துக் கொண்டு பொத்தானியபுரம் மாதா கோவில் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த கடையின் பணியாளர் தாமோதரனிடம் நீண்ட விசாரணைக்குப் பின்னர் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை எடை குறைவாக தருவதைக் கண்டு கோபம் கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்ய சொன்னார் பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் தங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் குறித்தும் அந்த ரேஷன் பொருள்கள் எடை சரியான அளவு இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார் பொதுமக்கள் மிக எடை குறைவாகத்தான் பொருள்கள் வழங்குகின்றனர் என்று சொல்வதைக் கேட்டு கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழக மக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மூன்று மாதங்கள் இலவசமாக அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்க உத்தரவிட்டும் அதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கும் ரேஷன் கடை ஊழியர்கள் இதுபோன்று தவறு செய்வதால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று மனம் வருந்தி கண்கலங்கினார். இதை கண்ட அந்த பகுதி மக்கள் மிகவும் வேதனையுற்று அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை கண்டு வியந்து பாராட்டினர் மேலும் அமைச்சர் இதுபோல் முறைகேடுகள் நடைபெற்றால் உடனே என்னை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் இதுபோன்று நடைபெறா வண்ணம் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடர் காலை நாளிதழ்....


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image