திருப்பத்தூரில் அமமுக  சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர் மற்றும் நலிவடைந்த ஏழை மக்களுக்கு நலதிட்ட உதவிகள்...

திருப்பத்தூரில் அமமுக சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர் மற்றும் நலிவடைந்த ஏழை மக்களுக்கு நலதிட்ட உதவிகள்... தமிழ்நாட்டில் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் நலிவடைந்த மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் அட்சய முருகன் தலைமையில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர். இதில் பேசிய மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம்... தற்போது அகில உலகத்தையும் ரத்தமின்றி யுத்தம் செய்து வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவரும் உள்ளது.‌ குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுக்காப்பாக இருக்கவேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியில் என்றும் மக்களுக்கு பாடுபடும் இயக்கமாக தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்கி வருகிறது.. அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையின் கீழ் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தமிழக மக்களுக்கு உழைக்க எந்நேரமும் காத்திருக்கிறோம் என பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் கண்ணபிரான்,அவைத்தலைவர் செல்வம் ஒன்றிய செயலாளர்கள் பெரியண்ணன், எழிலரசி மற்றும் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பூபதி. நகர பொருளாளர் சரவணன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர வார்டு கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image