வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....பண்பலை எனப்படும் எஃப்.எம். FM – Frequency Modulation வானொலி ஒலித்த நாள் இன்று.... June 11, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....பண்பலை எனப்படும் எஃப்.எம். FM – Frequency Modulation வானொலி ஒலித்த நாள் இன்று.... இரைச்சல் ஏதுமின்றி துல்லியமான ஒலியில் எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகம் ஆனது. இதனை எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1933ஆம் ஆண்டில் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமை பெற்று 1935, ஜூன் - 11 அன்று பொதுமக்களுக்காக ஒலிபரப்பப்பட்டது. முதலாவது ஒலிபரப்பு நியூயார்க் நகரின் எம்பயர் கட்டிடத்திலிருந்து செய்யப்பட்டது. அப்போது அதனுடைய திறன் 2 KW மட்டுமே. இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் 1977 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் முதலாவது பண்பலை ஒலிபரப்பு துவக்கப்பட்டது. பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி நிலையங்கள் காலை தொடங்கி நள்ளிரவு வரை ஒலிபரப்புகின்றன. *தற்போது ஏராளமான பண்பலை வானொலிகள் இணையத்தின் வழியே ஒலிபரப்பாகின்றன. இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- தமிழ் சுடர் காலை நாளிதழ்...