தமிழ் சுடர் செய்தி எதிரொலி.. கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி விரைவில்  80 கோடி மதிப்பில் சின்னாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு...

தமிழ் சுடர் செய்தி எதிரொலி.. கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி விரைவில்  80 கோடி மதிப்பில் சின்னாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு... கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுங்கச்சாவடியால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணம் கட்டிவிட்டு செல்ல வேண்டி உள்ளது. சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி நகர பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நமது தமிழ் சுடரில்  இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் தமிழ் மாநில கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர  செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பறக்கும் படை சக்தி கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. அதில் முக்கிய தீர்மானமாக கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடியை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். இந்த சுங்க சாவடி நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. இதனையடுத்து மத்திய தரை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சின்னாறு என்ற பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி இடம் மாற்றத்திற்காக போராட்டம் நடத்திய தமிழ் மாநில கட்சி நிர்வாகிகள் மத்திய அரசுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கிருஷ்ணகிரி நகர பொதுமக்களுக்கும் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது... இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடர் காலை நாளிதழுடன்... செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image