தமிழகத்தில் வரும் 8ம் தேதி முதல் உணவு விடுதிகள் (ஹோட்டல்கள்) 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 8ம் தேதி முதல் உணவு விடுதிகள் (ஹோட்டல்கள்) 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.எஸ்.சண்முகம், செயலாளர் பி.எல்.பழனிச்சாமி ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜூன் 8-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 50 சதவீத ஊழியர்களுடன் உணவு விடுதிகள் (ஹோட்டல்கள்) செயல்படுவதற்கு, பிரதமர் நரேந்திரமோடி அவர்களும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் சேலம் மாநகர ஆணையாளர் ஆகியோர் விதிக்கும் சட்டதிட்டங்களை தவறாமல், அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் பின்பற்றுவோம். கொரோனா நோய் பரவலை தடுத்திட அரசின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். மீறுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட ஹோட்டல் மீது, சங்கத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஹோட்டல் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் அணிவதையும் கட்டாயமாக கடைபிடிப்போம். ஊழியர்கள் உணவு தயாரிக்கும் போது கையுறை அணிந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செயல்படுவார்கள். எனவே வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம். உணவு விற்பனை விலையில் பழைய விலையே தொடரும். விலையில் மாற்றம் எதுவும் செய்யப்போவது இல்லை. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உள்ளே நுழையும்போது, தெர்மோமீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும். தற்போது 50 சதவீத ஊழியர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி இருக்கிறோம். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். ஹோட்டல்களை இரவு 9.30 வரை நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அப்போது அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் உடன் இருந்தனர்.


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image