வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... இன்று  வாழ்ந்து வரலாறு ஆன எளிமை மற்றும் நேர்மையின் உருவமான .கக்கன் அவர்களின் பிறந்த நாள்...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... இன்று வாழ்ந்து வரலாறு ஆன எளிமை மற்றும் நேர்மையின் உருவமான .கக்கன் அவர்களின் பிறந்த நாள்... *கக்கன் எம்.எல்.ஏ-வாக எம்.பி-யாக இருந்தது மட்டுமில்லை...காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் அமைச்சராகவும் பதவி வகித்தவர்* அதுவும் பொதுப்பணித்துறை மந்திரி...மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்... தோழர் ஜீவாவின் தலைமையில்தான் கக்கனின் திருமணம் நடந்தது. ஒய்வு பெற்ற காலத்தில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். இவருக்கு யாரும் எழுந்து உட்காரவும் இடம் கொடுக்கவில்லை. தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் பொது வார்டில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர். முதலமைச்சர் எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்... எதையாவது தாங்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என எம்.ஜி.ஆர் தொடர்ந்து வற்புறுத்தவே அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் மட்டும் போதும் என்று பெற்றுக் கொண்டவர். பின்னர் எம்.ஜி.ஆர் சென்னை திரும்பியவுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார். அத்தோடு கக்கனுக்கு முதியோர் ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார் *இவர்தான் தியாகி கக்கன் அவர்கள்!.. இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image