நாட்டறம்பள்ளி அடுத்த எரியூர் பகுதியில் பள்ளி மாணவர்களை வைத்து மணல் திருட்டில் ஈடுபடும் மணல் மாஃபியாகள்... 

நாட்டறம்பள்ளி அடுத்த எரியூர் பகுதியில் பள்ளி மாணவர்களை வைத்து மணல் திருட்டில் ஈடுபடும் மணல் மாஃபியாகள்...


 


  திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எரியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீராசாமி மற்றும் மாரிமுத்து இவர்கள் இருவரும் இணைந்து அஃதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்திலும் அதன் அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான ஆற்று ஓடையிலும் அதிகாலை 4 மணி முதல் 10 வரையும் இரவு நேரங்களில் சுமார் 12 மணி வரையிலும் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை வைத்து தினமும் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம்பள்ளி வருவாய் துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதனை தீவிர படுத்திய வேலையிலும் அந்த எரியூர் பகுதியில் மட்டும் மணல் திருட்டு தங்கு தடையின்றி நடைபெற்று உள்ளது. இதுகுறித்து மல்லப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சிவன் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை அறிந்த மணல் திருட்டு மாஃபியா கும்பல் தலைவன் வீராசாமி சிறிய நாட்கள் தலை மறைவாக இருந்துள்ளார். அதன்பின் தனது திருட்டு தொழிலான மணல் திருட்டை மீண்டும் கடந்த வாரம் முதல் மீண்டும் பள்ளி மாணவர்களை கொண்டு தீவிர மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இந்த மணல் திருட்டுக்காக பள்ளி மாணவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து ஆபத்தான பாதாளக் குழியில் இறங்கி மணல் எடுக்கும் கொடிய பணியை செய்து வருகிறார். படிக்க வேண்டிய மாணவர்களை தனது சுயநலத்திற்காக அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வீராசாமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் கனிமங்கள் திருட்டை ஒழிக்க மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image