திருப்பத்தூரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

திருப்பத்தூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது.. நாட்டையை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலையில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் சட்ட மன்ற தேர்தல் பொறுப்பாளர் பரத் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நகர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெகநாதன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நெடுமாறன் உட்பட 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image