திருச்சி அருகே மகன் இறந்த சோகம் ; கியாஸ் சிலிண்டர் வெடித்து குடும்பமே பலி ; தீயிலேயே சடலங்களும் சாம்பலான சோகம்...

மகன் இறந்த சோகம் ; கியாஸ் சிலிண்டர் வெடித்து குடும்பமே பலி ; தீயிலேயே சடலங்களும் சாம்பலான சோகம்.


திருச்சி அருகே மகன் இறந்த சோகத்தில் குடும்பமே கியாஸ் சிலிண்டர் வெடிக்கச் செய்து இறந்ததால் அப்பகுதியே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. திருவெறும்பூர் அருகே பூலாங்குடிகாலனி பாரத் நகர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜய கௌரி (60) . ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் விஜயகுமார் சமீபத்தில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவரை வீட்டில் வைத்து கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மதியம் மகனின் உடல்நிலை மோசமானதைக் கண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதன் மருத்துவர்கள் பரிசோதித்ததில் விஜயகுமார் இறப்பை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து விஜய கௌரி , அவரது மகள்கள் விஜயலட்சுமி (32) , விஜயவாணி (29) ஆகியோரும் பெரும் சோகத்தில் மனஉளைச்சலில் தவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு இவர்களது வீட்டிலிருந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டரால் அப்பகுதியே அதிர்ந்தது. இதனைத் தொடர்ந்து சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த விஜயகுமாரின் சடலத்துடன் ஜெயகௌரி, விஜயவாணி, விஜயலட்சுமி ஆகிய 3 பேர்களது சடலங்களும் தீயில் எரிந்து கிடந்தன. இதனால் அப்பகுதியைப் பெரும் பரபரப்பும் சோகத்திலும் ஆழ்த்தியது. தகவலறிந்த நவல்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை மேற்கொண்டார். மேலும் வழக்கு பதிந்து மகன் இறப்பால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மகன் இறந்த சோகத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் தமிழ் சுடர் காலை நாளிதழுடன் இணைந்திருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image