பெருமணல் கிராமத்தில் கடலுக்கு குளிக்க சென்ற காட்வின் என்ற வாலிபர் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் மாயமானவர் 19 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு. கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை...

பெருமணல் கிராமத்தில் கடலுக்கு குளிக்க சென்ற காட்வின் என்ற வாலிபர் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் மாயமானவர் 19 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.


 


கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த தாமஸ் மகன் கிளாட்டின் (வயது 24). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. இந்நிலையில் காட்வின் தனது நண்பர் நான்கு பேர்களுடன் பெருமணல் கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று அடித்தபோது குளித்து கொண்டிருந்தவர்கள் கடல் அலையில் சிக்கி தவித்தனர். அதில் 4 பேர் மட்டும் அலையில் இருந்து தப்பி கரைக்கு வந்தனர். காட்வின் மட்டும் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் சென்றவர் மாயமானார். உடனே அவருடன் குளித்துக் கொண்டிருந்த மற்ற நண்பர்கள் ஊருக்குள் வந்து உறவினர்களிடம் விபரத்தை சொல்லியுள்ளனர். அதன் பேரில் கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் மாயமான வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் கடற்கரை பகுதியில் உள்ள தூண்டில் வளைவு பகுதியில் காட்வின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடலில் மாயமான இளைஞர் உடல் 19 மணி நேரத்திற்குப் பின்பு சடலமாக மீட்கப்பட்டது. அதனை மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். உடலை கூடங்குளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


தமிழ் சுடர் காலை நாளிதழ்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image