வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... உலக பாரம்பரிய சின்னமான ஊட்டி மலை இரயில் தனது முதல் சேவையை துவக்கிய தினம் இன்று (1899).

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... உலக பாரம்பரிய சின்னமான ஊட்டி மலை இரயில் தனது முதல் சேவையை துவக்கிய தினம் இன்று (1899). நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக ஊட்டி மலை ரெயில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி மலை ரயில் இயக்கம் தொடங்கப்பட்டது. மலை ரெயில் 1899ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி பொதுமக்களுக்காக மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே இயக்க அர்ப்பணிக்கப்பட்டது 1903ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி இந்திய அரசு மலை ரெயில் சேவையை எடுத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து குன்னூர் –ஊட்டி இடையே 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் மலை ரெயில் இயக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1918ஆம் ஆண்டு தென்னக ரெயில்வேயில் இணைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மலை ரெயில் அனைத்தும் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. இன்றளவும் உலகின் மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித் துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள்,ரயில் நிலையங்கள் என அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் உள்ளன. *எனவேதான் இந்த ரயிலுக்கு உலக பாரம்பரியச் சின்னம் என்ற சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதாக யுனெஸ்கொ அறிவித்துள்ளது. இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image