வாணியம்பாடி தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அண்ணாநகர் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1 லட்சம் விதை பந்து... June 05, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அண்ணாநகர் பகுதியில் கொரோனா காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஒன்றிணைந்து 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்து வைத்திருந்தனர்..இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் அவர்கள் முன்னிலையில் வனப்பகுதிகளில் விதைகளை விதைத்தனர் மற்றும் மரக்கன்றுகளை நட்டு விதைப்பந்துகள் தயாரித்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர் இந்நிகழ்வில் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியன் திருப்பத்தூர் வன பாதுகாப்பு அலுவலர் சோழைராஜ் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்..இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்...