பழமை வாய்ந்த தவசிலிங்க சுவாமி கோயிலில் நடைபெறும் திருப்பணிகள்
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு...
விருதுநகர் அருகே மூலிப்பட்டியில் மூலிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ வழிபாட்டு கோயிலான இந்த கோயிலில் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. சுற்றுப்பகுதி கிராம மக்களின் ஒத்துழைப்போடு கோயில் திருப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேற்கொண்டு வருகின்றார். கோயிலில் புதிதாக மூலஸ்தான ராஜகோபுரம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கன்னிவிநாயகர், வேட்டை கருப்பசாமி, சிவன், முருகன், வள்ளி, பார்வதி உட்பட பல்வேறு பரிகார தேவதைகள் புதிதாக அமைக்கும் பணிகளும் மூலஸ்தானம், அர்த்த மண்டபம்(கல திருப்பணிகள்) மகாமண்டபம், திருமதில்சுவர், தளம் கல் பதிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த 45 நாட்களாக திருபணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திருப்பணிகள் தொடங்கியது. நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயில் திருப்பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஆட்சியர் கண்ணன் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர் கோயில் ராஜகோபுரம், சுவாமி சிலைகள், சுவாமி சன்னதிகள், மூலஸ்தானம் உட்பட அனைத்து பணிகளையும் பார்வையிட்டனர். சாலை வசதிகள், கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கல்யாண மண்டபம் மற்றும் சுற்றுச்சுவர், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்க கோயில் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டனர். அப்போது சிற்பி கருப்பசாமி, கோயில் தலைவர் செல்லசாமி, மூலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி ராஜா, விருதுநகர் ஒன்றிய அதிமுக செயலாளரும் கோயில் செயலாளருமான தர்மலிங்கம், கோயில் பொருளாளர் கணியப்பன், மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமார், அதிமுக ஒன்றிய கழக துணை செயலாளர் சின்னசாமி, சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டிகருப்பசாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சரவணன், கோயில் நிர்வாகி அழகர்சாமி, சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடர் காலை நாளிதழ்...