திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரண உதவி...

திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரண உதவி...


கொடிய வைரசயான கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் நகரிலுள்ள ஆட்டோ ஓட்டுனர்களின் நிலைமையை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருப்பத்தூர் நகர செயலாளர் அட்சயா முருகன்  ஏற்பாட்டில்  சுமார் 25க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள், மற்றும் மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் தொழிலதிபர் ஞானசேகரன் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரண உதவி மற்றும் தல 1000 ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதில்  துணை வட்டாட்சியர் ரேவதி, பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் நசிமா கால்பாய், சமூக ஆர்வலர் ஜெய் பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்...


ஒருவன் கஷ்டத்தில் இருக்கும்போது  அவன்‌ நிலை அறிந்து உரிய  நேரத்தில் உதவி செய்பவன்  மகா புண்ணியவான் என்பது பழமொழி ....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image