திருப்பத்தூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வேறு தேதிக்கு மாற்ற கோரி திமுக மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் மனு...

திருப்பத்தூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை   தள்ளி வைக்க கோரி திமுக மாணவரணி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு... தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.  மீண்டும்  ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பின்  மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்  அப்போது பள்ளி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு  அடுத்த மாதம் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறும் என  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதை எதிர்த்து திமுக  தலைவர் ஸ்டாலின்  கடும் எதிர்ப்பு தெரிவித்து கொரோனா வைரஸ் பிரச்சினை முடியும் வரை தேர்வு ரத்து செய்யப்பட்ட வேண்டும் என அறிக்கை விட்டார்.‌இந்நிலை  திருப்பத்தூர் மாவட்ட  திமுக  இளைஞரணி  சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் ரத்து செய்து கொரோனா பிரச்சினை முடியும் வரை மாணவர்களின் நலனைக் காக்க தேர்வு மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என திருப்பத்தூர்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனிடம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அப்போது உடன் மாவட்ட   மாணவரணி அமைப்பாளர் மோகன்,   மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் மற்றும் திமுக இளைஞரணி  நிர்வாகிகள் பிரேம்குமார்,வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்... 



இதுபோன்றசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி.சரவணன்...



 


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image