வரலாறு முக்கியம் அமைச்சரே... உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ராமன் ஆனந்தா சட்டர்ஜி பிறந்த தினம் இன்று...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி பிறந்த தினம் இன்று..


 


சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் கவுரவ முதல்வராகப் பணிபுரிந்தபோது, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அவர்கள் இடையே மலர்ந்த நட்பு இறுதிவரை நீடித்தது. பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளும் இந்த இதழ்களில் இடம்பெற்றன. காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், சி.எஃப்.ஆண்ட்ரூஸ், பிரேம்சந்த், லாலா லஜபதிராய், சகோதரி நிவேதிதை, ஜாதுநாத் சர்க்கார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகாலம் வரை, ஒன்றுபட்ட இந்தியாவின் முன்னணி தலைவர்கள், ஆட்சியாளர்களால் இந்த 2 இதழ்களும் மிகவும் மதிக்கப்பட்டன. ‘பிரபாசி’யில் தாகூரின் கவிதைகளும், ‘மாடர்ன் ரிவ்யூ’வில் அவரது மற்ற ஆங்கில மொழிப் படைப்புகளும் தொடர்ந்து வெளிவந்தன. இதன்மூலம் தாகூரை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை பெற்றார். எப்போதுமே உண்மைகள், துல்லியமான புள்ளிவிவரங்களுடன் தனது கட்டுரைகளை எழுதுவார். பத்திரிகை தர்மத்தை இவர் ஒருபோதும் மீறியதில்லை. இவரது திறன்களும் ஆர்வங்களும் பரந்துபட்டவை. அவற்றைத் தன் வாசகர்களுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். இவரது எழுத்துகளில் நகைச்சுவை இழையோடும். இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. இதழியல், தேசத் தலைவர்கள் தொடர்பான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘இந்தியா அண்டர் பாண்டேஜ்’ என்ற நூலை தனது அச்சகத்தில் அச்சிட்டதற்காக இவருக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சாதி, மத, வகுப்புவாத எண்ணங்களுக்கு சிறிதும் இடம்கொடுக்கா மல், முழுமையான ஜனநாயகவாதியாக செயல்பட்டவர். இந்தியாவில் நவீன இதழியலுக்கு வித்திட்டவர். *இந்திய இதழியல் துறையின் முன்னோடிப் படைப்பாளியான* *ராமானந்த சட்டர்ஜி 78ஆவது வயதில் (1943)* *காலமானார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


 


தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image